வடகொரியர்களுக்கு விசா சலுகை ரத்து

கோலாலம்பூர்: மலேசியாவுக்குள் நுழைவதற்கு வடகொரியர்களுக்கு வழங்கப்பட்டிருந்த விசா சலுகை மார்ச் 6ஆம் தேதியிலிருந்து ரத்து செய்யப்படுவதாக மலேசிய துணைப் பிரதமர் அஹமட் சாஹிட் ஹமிடி கூறியுள்ளார். தேசிய பாதுகாப்பு காரணங் களுக்காக இனிமேல் மலேசியா வரும் வடகொரியர்களுக்கு விசா முறை அமல்படுத்தப்படுவதாக அவர் சொன்னார். ஆகவே மலேசியாவுக்குள் நுழைவதற்கு முன்னதாக வடகொரியர்கள் அவசியம் விசா அனுமதி வாங்கியிருக்க வேண்டும் என்று திரு சாஹிட் கூறினார். நாட்டின் பாதுகாப்பு நலனை கருத்தில்கொண்டு மலேசிய உள்துறை அமைச்சு எடுத்த இந்த முடிவை குடிநுழைவுத் துறை அமல்படுத்தும் என்றும் இந்த விசா முறை வரும் திங்கட்கிழமை முதல் அமலுக்கு வருவதாகவும் அவர் சொன்னார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!