அமெரிக்கா: 3வது இந்தியர் மீது துப்பாக்கிச் சூடு

அமெரிக்காவில் மேலும் ஓர் இந்திய வம்சாவளியினர் தாக்கப் பட்டுள்ளார். சியேட்டல் புறநகர்ப் பகுதியில் 39 வயது சீக்கியரை அடையாளம் தெரியாத ஆடவர் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை துப்பாக்கியால் சுட்டார். அந்த சீக்கியர் தமது வீட்டிற்கு வெளியே காரைப் பழுதுபார்த்துக் கொண்டிருந்தபோது அந்த மர்ம நபர் அவரை அணுகியதாகக் கூறப்படுகிறது. இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சீக்கியப் பாரம்பரியப்படி தாடி வளர்த்து தலைப்பாகை அணிந்திருந்த அந்த சீக்கியரிடம் "உனது சொந்த நாட்டுக்குத் திரும்பிப் போய் விடு," என்று அந்த ஆடவர் கத்தியதாகத் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து,

துப்பாக்கியை வெளியே எடுத்த அந்த ஆடவர் அந்த சீக்கியரை நோக்கிச் சுட்டார். சீக்கியரின் கையில் தோட்டா பாய, தாக்குதல் காரர் அவ்விடத்திலிருந்து தப்பி னார். காயமடைந்த சீக்கியர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உயிருக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என்றும் சிகிச்சை பெற்று அவர் வீடு திரும்பிவட்டதாகவும் சம்பவம் நிகழ்ந்த இடத்துக்கு அருகில் உள்ள ரென்டன் புறநகர்ப் பகுதியில் உள்ள சீக்கிய சமூகத்தினரின் தலைவரான ஜஸ்மீத் சிங் கூறியதாக அமெரிக் காவின் தி டைம்ஸ் நாளிதழ் குறிப்பிட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!