வடகொரியாவில் தவிக்கும் மலேசிய குடும்பம்

கோலாலம்பூர்: வடகொரியாவில் நேற்று முன்தினம் விமானத்தில் ஏறவிருந்த மலேசிய குடும்பத் தினர் தடுத்து நிறுத்தப்பட்டனர். அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த உறவினர் என்று கூறிய கமில் கசாலி என்பவர் ஃபேஸ் புக் பதிவில் இதனைத் தெரிவித் திருந்தார். தமது ஒன்றுவிட்ட சகோதரர் இஸா கர்மிலா ரம்லி, அவரது கணவர், மூன்று குழந்தைகள் உள்ளிட்ட மலேசியர்கள் மலே சியாவுக்கான விமானத்தில் ஏற முயற்சி செய்தபோது வட கொரிய அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டனர் என்று அவர் கூறினார். ஃபேஸ்புக் பதிவில் கமில் கசாலி, சொத்து முகவராக பணியாற்றுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வடகொரி யாவில் உள்ள தமது உறவினர் களுக்காக பிரார்த்தனை செய்யு மாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!