பதவி நீக்கப்பட்ட பார்க்கினை கைது செய்ய கோரிக்கை

சோல்: பதவி நீக்கப்பட்ட தென்கொரிய அதிபர் பார்க் கியன் ஹையைக் கைது செய்யக் கோரி எதிர்க்கட்சியினரும் அவரைக் குறை கூறி வருபவர்களும் வலியுறுத்தி வரும் வேளையில் திருவாட்டி பார்க் தொடர்ந்து மெளனமாக இருந்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன. அவர் பதவி நீக்கப்பட்டதை அரசியலமைப்பு நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்த பின்னரும் திருவாட்டி பார்க் அதிபர் மாளிகை யிலேயே தொடர்ந்து இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் திருவாட்டி பார்க்கின் உருவப் படங்களை அகற்றுமாறு அந்நாட்டு தற்காப்பு அமைச்சரும் வெளியுறவு அமைச் சரும் உத்தரவிட்டிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. திருவாட்டி பார்க் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வரும் அவரது எதிர்ப்பாளர்கள் ஆர்ப்பாட்டங் களில் ஈடுபடப்போவதாக அறிவித் துள்ளனர். இந்நிலையில் பார்க்கின் ஆதர வாளர்கள் சோல் நகரில் அவருக்கு ஆதரவாக பேரணி களை நடத்தி வருகின்றனர்.

பதவி நீக்கப்பட்ட தென்கொரிய அதிபர் பார்க் கியன் ஹைக்கு ஆதரவாக சோல் நகரில் நடந்த பேரணியில் கலந்து கொண்டவர்கள் அவருக்கு ஆதரவாக குரல் எழுப்புகின்றனர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் அதிபரை பதவி நீக்கம் செய்தது நியாயமற்றது என்று அவர்கள் கூறினர். படம்: ராய்ட்டர்ஸ்

முழுவிவரம்: epaper.tamilmurasu.com.sg

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!