ஒபாமாவின் பருவநிலை மாற்ற விதிகளை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்த டிரம்ப்

வா‌ஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் முன்னாள் அதி பர் ஒபாமா ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட பருவநிலை மாற்றக் கொள்கைகளை ரத்து செய்யும் உத்தரவில் கையெழுத் திட்டுள்ளார். ஒபாமா அதிபராக இருந்தபோது பருவநிலை மாற்றம் தொடர்பான தடைகளை நோக்கமாகக் கொண்டு அந்த விதிமுறைகள் அமல்படுத்தப் பட்டன. அவற்றைத் திரும்பப் பெறும் நிர்வாக ஆணையில் கையெழுத் திட்ட அதிபர் டிரம்ப், இதன் மூலம் நிலக்கரி எரிசக்தி மீதான தடை நடவடிக்கைப் போரை முடிவுக்கு கொண்டுவர இயலும் என்று தெரி வித்துள்ளார். புதிய ஆணை ஒபாமாவின் பத்துக்கு மேற்பட்ட நடவடிக்கை களைத் தடை செய்கிறது. அதிபர் டிரம்ப் தடை உத்தரவில் கையெழுத்திட்டதை நிலக்கரிச் சுரங்க அதிபர் வரவேற்றபோதிலும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கண் டனம் தெரிவித்துள்ளனர்.

நிலக்கரிச் சுரங்க அதிபர்களும் பணியாளர்களும் சுற்றி நிற்க 'எரிசக்தி சுதந்திரம்' என்னும் புதிய ஆணையில் கையெழுத்திட்டார் அதிபர் டிரம்ப். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!