விமானத்திலிருந்து இழுத்துச் சென்ற பயணிக்கு மூளையில் அதிர்ச்சி

வா‌ஷிங்டன்: சிகாகோ விமான நிலையத்தில் யுனைட்டெட் ஏர்லைன்ஸ் விமானத்திலிருந்து பாதுகாப்பு அதிகாரிகளால் வலுக்கட்டாயாகமாக இழுத்துச் செல்லப்பட்டு வெளியேற்றப்பட்ட பயணிக்கு மூளையில் அதிர்ச்சி ஏற்பட்டிருப்பதாகவும் அவரது மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார். அந்த சம்பவத்திற்குப் பிறகு வியட்னாமைச் சேர்ந்த 69 வயது மருத்துவரான டேவிட் டாவோ, மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றதாகவும் அவர் புதன்கிழமை மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியதாகவும் அவரது வழக்கறிஞர் தாமஸ் டிமிட்ரியோ கூறினார். டேவிட் டாவோ, யுனைட்டெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக்கூடும் என்றும் அந்த வழக்கறிஞர் கூறியுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!