ஜோகூர் பாரு: கோவில் மீது வெடிகுண்டுத் தாக்குதலுக்குத் திட்டமிட்ட ஆடவருக்குச் சிறை

ஜோகூர் பாருவில் கோவில், இரவு நேர கேளிக்கை விடுதி மீது வெடிகுண்டுத் தாக்குதல் நடத்த திட்டமிட்டதற்காக 33 வயது இரவுச் சந்தை வணிகருக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஜசனிஸாம் ரோஸ்னி என்ற அந்த ஆடவர், தான் சதிச் செயலில் ஈடுபட்டதை நீதிமன்றத் தில் நேற்று ஒப்புக்கொண்டார். ஜோகூர் பாருவில் உள்ள ஒரு கோவில் மீதும் ஓர் இரவுக் கேளிக்கை விடுதி மீதும் பயங்கர வாதத் தாக்குதல்களைத் தொடுப் பதற்காக 2016 ஜூன் முதல் ஆகஸ்ட் 9ஆம் தேதிக்கு இடைப் பட்ட காலத்தில் பத்து பகாட், கம்போங் பரிட் கன்டுங்கில் உள்ள ஒரு வீட்டில் சதிச் செயலில் ஈடுபட்டதாக ரோஸ்னி மீது குற்றம் சாட்டப்பட்டது. குற்றத்தின் தீவிரத்தைக் கருதி அவருக்குக் கடுமையான தண் டனை விதிக்கப்படவேண்டும் என அரசுத் தரப்பு வழக்கறிஞர் திரு முகம்மது நூர் கேட்டுக்கொண்டார்.

தண்டனை விதிக்கப்பெற்ற ஜசனிஸாம் ரோஸ்னி (வலது). படம்: நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon