வடகொரியாவுக்கு அமெரிக்கத் துணை அதிபர் பென்ஸ் எச்சரிக்கை

வா‌ஷிங்டன்: விமானம் தாங்கிக் கப்பலில் அமைக்கப்பட்ட பெரிய மேடையில் நின்று உரையாற்றிய அமெரிக்கத் துணை அதிபர் மைக் பென்ஸ், அமெரிக்க ராணுவத்தின் உறுதியை இனியும் சோதிக்க வேண்டாம் என்று வட கொரியாவை எச்சரித்தார். "வழக்கமான ஆயுதங்களோ அல்லது அணுவாயுதங்களோ இவற்றில் எதைப் பயன்படுத் தினாலும் அதற்குரிய பதிலடி மிகப்பெரிய அளவில் இருக்கும்," என்றார் அவர். அச்சமூட்டும் வகையில் இருந்த மாபெரும் 'ரோனால்ட் ரீகன்' கப்பலில் பச்சை நிற ராணுவ உடையை அணிந்து திரு பென்ஸ் உரையாற்றினார். "நட்பு நாடுகளான ஜப்பான், சீனா மற்றும் உலக சக்திகளுடன் சேர்ந்து பொருளியல் வழியிலும் தூதரக முறையிலும் வட கொரி யாவுக்கு அதிபர் டோனல்ட் டிரம்ப் பின் நிர்வாகம் அழுத்தத்தை ஏற் படுத்தும். "ஆனால் அதே சமயத்தில் நாம் ஆயத்தமாக இருப்பது அவ சியம்," என்று கடற்படையினரிடம் துணை அதிபர் பென்ஸ் சொன் னார்.

விமானந்தாங்கிக் கப்பலில் உரையாற்றிய அமெரிக்கத் துணை அதிபர் மைக் பென்ஸ். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!