சீனக் கடலோர காவல் படை மீது பிலிப்பீன்ஸ் மீனவர்கள் புகார்

மணிலா: தென்சீனக் கடல் பகுதியில் காணப்பட்ட தங்கள் படகு மீது சீனாவின் கடலோர காவல் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பிலிப்பீன்ஸ் மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அதுகுறித்து புலன் விசாரணை செய்து வருவதாக பிலிப்பீன்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மார்ச் 27ஆம் தேதி நடந்த அந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத் தில் யாரும் காயமடையவில்லை என்று உயர் அதிகாரி ஒருவர் கூறினார். அந்தக் கடல் பகுதியில் பிலிப்பீன்ஸ் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது துரிதப் படகில் வந்த சீனக் கடலோரக் காவல் படையினர் அந்த மீனவர்கள் மீது 7 தடவை துப்பாக்கியால் சுட்டதாக பிலிப்பீன்ஸ் கடலோரக் காவல் படை வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது. மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது உறுதியாகத் தெரியவந்தால் இது தொடர்பில் சீனாவுக்கும் பிலிப்பீன் சிற்கும் இடையே தகராறு உண்டாகும் என்று கூறப்படுகிறது.