வேனுக்குள் வெப்பம் தாக்கி உயிரிழந்த 6 வயது சிறுவன்

கோலாலம்பூர்: மலேசியாவில் 6 வயது சிறுவன், ஒரு வேனுக்குள் மூன்று மணி நேரம் சிக்கிக் கொண்டதால் வெப்பம் தாக்கி அவன் உயிரிழந்ததாக போலி சார் கூறினர். முகம்மது இக்ராம் டானிஸ் எனும் சிறுவன், ரவாங்கில் உள்ள பண்டார் கண்ட்ரி ஹோம்ஸ் பகுதியில் உள்ள அவனது வீட்டிலிருந்து பாலர் பள்ளிக்குச் செல்ல சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு வழக்கம் போல வேனில் ஏறியிருக்கிறான். ஆனால் பாதி வழியிலேயே அச்சிறுவன் அயர்ந்து தூங்கி விட்ட நிலையில் அந்த வேன், பாலர் பள்ளியை வந்து சேர்ந்ததும் அந்த சிறுவனைத் தவிர மற்ற சிறுவர்கள் அனைவரும் வேனிலிருந்து இறங்கிவிட்டனர்.