கனரக வாகனம், பேருந்து மோதியதில்

ஒருவர் மரணம், 9 பேர் காயம் ஜூரோங் தீவில் நேற்றுக் காலை தனியார் பேருந்தும் கனரக வாகனமும் மோதியில் ஒருவர் உயிரிழந்தார். ஒன்பது பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். கண்மூடித்தனமாக செயல்பட்டு மரணம் விளைத்ததற்காக 58 வயது பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜூரோங் தீவு விரைவுச்சாலை, செராயா அவென்யூ சந்திப்பில் நடந்த இந்த விபத்து குறித்து நேற்று காலை 8.56 அளவில் போலிசுக்கு தெரிவிக்கப்பட்டது. காலை 8.55க்கு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும் தொடர்ந்து, இரு தீயணைப்பு வாகனங்கள், இரு ஆம்புலன்ஸ் வாகனங்கள், ஒரு ஆதரவு வாகனம் ஆகியவற்றை சம்பவ இடத்துக்கு அனுப்பியதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது. 62 வயது பேருந்து பயணி சம்பவ இடத்தில் உயிரிழந்ததாக போலிஸ் தெரிவித்தது.

ஜூரோங் தீவில் நேற்று நிகழ்ந்த விபத்தில் 62 வயது பேருந்து பயணி உயிரிழந்தார். ஒன்பது பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். படம்: ஸ்டோம்ப்