தென்கொரியா பணம் தராவிட்டால் வர்த்தக ஒப்பந்தத்தை ரத்து செய்வோம்: அமெரிக்கா

வா‌ஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், நட்பு நாடான தென் கொரியாவுடனான வர்த்தக உறவை துண்டிக்கப் போவதாக எச்சரித்துள்ளார். அமெரிக்கா நிறுவும் ‘தாட்’ ஏவுகணை எதிர்ப்பு முறைக்கு தென்கொரியாவே பணம் தர வேண்டும் என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார். தென்கொரியாவில் நிறுவப் படும் அமெரிக்க ‘தாட்’ ஏவு கணையின் மதிப்பு ஒரு பில்லியன் டாலர் என்றார் அவர். “அந்நாட்டுடன் பேச்சு நடத்துவோம்.

‘தாட்’ சாதனங்களுக்கு பணம் தர மறுத்தால் அந்நாட்டுட னான தாராள வர்த்தக ஒப்பந் தத்தை ரத்து செய்வோம்,” என்று திரு டிரம்ப் கூறினார். ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத் துக்கு அளித்த பேட்டியில் தென் கொரியாவுடனான ஐந்தாண்டு வர்த்தக ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றார் அவர். ‘கோரஸ்’ என்று அழைக்கப் படும் அமெரிக்க-கொரிய வர்த் தக ஒப்பந்தத்தைக் குறைகூறிய அவர், ஹில்லாரி செய்த மோச மான ஒப்பந்தம்,” என்றார்.

தென்கொரியாவில் அமெரிக்க ‘தாட்’ ஏவுகணை தற்காப்பு முறை நிறுவுவதற்கு அந்நாட்டு மக்களே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். படம்: ஏஎஃப்பி