லண்டனில் திடீர் சோதனை; பெண் சுடப்பட்டார்

லண்டன்: லண்டனில் பயங்கர வாத நடவடிக்கைகளுக்கு எதி ராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக் கைகளில் ஒரு பெண்ணை போலிசார் சுட்டனர். வடமேற்கு லண்டனில் உள்ள ஒரு இடத்தில் இருபதுகளில் இருந்த ஒரு பெண் சுடப்பட்டார் என்று காவல்துறை அறிக்கை தெரிவித்தது. பயங்கரவாதத்துக்கு எதிராக மேற்கொள்ளப்படும் விசாரணை யின் ஒரு பகுதியாக இது இடம் பெற்றது என்றும் காவல் துறை யினர் குறிப்பிட்டனர். விசாரணை வலையில் சிக்கி யிருந்த அந்தப்பெண்ணுக்கு தற் போது மருத்துவமனையில் பலத்த காவலுக்கு இடையே சிகிச்சை அளிக்கப்படுகிறது. சம்பவத்தன்று பயங்கரவாத குற்றச்சாட்டுகளின் தொடர்பில் மூவரை போலிசார் கைது செய்த னர். இவர்களில் ஒருவர் 16 வயது இளையர். மற்ற இருவரும் 20 வயதுகளில் இருந்த ஒரு பெண், ஒரு ஆண். தென்கிழக்கு இங்கிலாந்தில் உள்ள கென்ட் வட்டாரத்திலும் 43 வயது பெண்ணை போலிசார் கைது செய்தனர். நால்வரும் பயங்கரவாத நடவடிக்கை களில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் கைதாகியுள்ளனர்.

மத்திய லண்டன் வட்டாரத்தில் கைது செய்யப்பட்ட ஒருவரை அதிகாரிகள் அழைத்துச் செல்கின்றனர். படம்: ராய்ட்டர்ஸ்