வடகொரியா: எந்நேரத்திலும் அணுவாயுத சோதனை நடத்தலாம்

பியோங்யாங்: வடகொரியா தான் எந்நேரத்திலும் அணுவாயுதச் சோ தனை நடத்தக்கூடும் என்று எச்ச ரிக்கை விடுத்துள்ளது. கிம் ஜோங் உன் விருப்பப்படி அணுவாயுதச் சோதனை எந்த இடத்திலும் நடத்தப்படலாம் என்று வடகொரியா தெரிவித்துள்ளது. அண்மைய காலமாக கொரிய தீபகற்பத்தில் பதற்றநிலை நிலவி வருகிறது. இந்நிலையில், வடகொரியா தொலை தூர ஏவுகணை அல்லது அதன் ஆறாவது அணுவாயுதச் சோதனையை நடத்த தயாராகி வருவதாக நம்பப்படுகிறது.

இதனால் வடகொரியாவுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்கும் சாத்தியம் உள்ளதாக அமெரிக்கா அறிவித்தது. அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அதற்குப் பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாக வடகொரிய வெளியுறவு அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது. அமெரிக்கா அதன் மிரட்டல் களை நிறுத்தாவிடில் வடகொரியா அணுவாயுதச் சோதனைகள் தொடர்ந்து நடத்தப்படும் என்று வடகொரிய வெளியுறவு அமைச்சு கூறியது. கடந்த 11 ஆண்டுகளில் வடகொரியா ஐந்து அணுவாயுதச் சோதனைகளை நடத்தியுள்ளது. அமெரிக்காவை எட்டக்கூடிய ஏவுகணைகளை உருவாக்க வட கொரியா விரைந்து வருவதாகவும் அதன் இலக்கை அது நெருங்கு வதாகவும் நம்பப்படுகிறது.