கடத்தப்பட்ட துருக்கிய நாட்டவர்கள் கைது

கோலாலம்பூர்: மலேசியாவில் கடத்தப்பட்டதாக முன்பு நம்பப்பட்ட இரு துருக்கிய நாட்டவர்கள் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த சந்தேகத்தில் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். துணைப் பிரதமர் டாக்டர் அஹமட் சாஹித் ஹமிடி இதனைத் தெரிவித்தார். இருவருடன் தொடர்பு கொண்டவர்களைப் பயங்கரவாதத் துக்கு எதிரான காவல்துறையினர் கண்காணித்து வந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.