பாதுகாப்புக்கு மிரட்டல்; துருக்கி நாட்டவர் மூவர் மலேசியாவில் கைது

கோலாலம்பூர்: பாதுகாப்பு காரணங் களுக்காக துருக்கி நாட்டைச் சேர்ந்த மூன்றாவது நபரை போலிசார் கைது செய்திருப்பதாக தகவல்கள் கூறின. முன்னதாக இந்த வாரம் துருக்கியைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஐஎஸ் பயங்கரவாதக் குழுவுக்கு நிதி உதவி வழங்கியதான சந்தேகத்தின் பேரில் அவ் விருவரும் கைது செய்யப்பட்டனர். இஸ்மெட் ஒஸிலிக் வியாழக் கிழமை கைது செய்யப்பட்டதாக அவரின் வழக்கறிஞர் கூறினார். தேசிய பாதுகாப்புக்கு மிரட்டலாக விளங்கியதால் இஸ்மெட் கைது செய்யப்பட்டதாக மலேசிய போலிஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கர் கூறியதாக ஊடகங்கள் கூறின. குடிநுழைவுத் துறை அதிகாரி ஒருவரைத் தாக்கியதற்காக இஸ்மெட் ஆரம்பத்தில் கடந்த டிசம்பர் மாதம் கைது செய்யப் பட்டதாகவும் அவர் ஜனவரி மாதம் பிணையில் விடுவிக்கப்பட்ட தாகவும் கூறப்பட்டது.