நைஜீரியா: கடத்தப்பட்ட 82 சிறுமிகள் விடுவிப்பு

அபுஜா: நைஜீரியாவில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு போகோ ஹராம் தீவிரவாதிகளால் கடத்தப்பட பள்ளிச் சிறுமிகள் 276 பேரில் 82 பேரை தீவிரவாதிகள் விடுவித்திருப்பதாக அதிபர் அலு வலகம் தெரிவித்ததது. போகோ ஹராம் தீவிர வாதிகளுடன் தொடர்ந்து நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து அந்த சிறுமிகள் விடுவிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. சிறைச்சாலைகளில் உள்ள போகோ ஹராம் தீவிரவாதி களை விடுவித்த பின்னரே அந்த சிறுமிகள் விடுவிக்கப்பட்டதாக அதிபர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

விடுவிக்கப்பட்ட சிறுமிகளை அபுஜா நகரில் அதிபர் வரவேற்பார் என்று கூறப்பட்டது. நைஜீரியாவில் போகோ ஹராம் தீவிரவாதிகளை தோற்கடிப்பதில் இருக்கும் அரசாங்கம் கடும் சவாலை எதிர்நோக்குகிறது. சிபோக் சிறுமிகள் என்றழைக்கப் படும் பெண்கள் கடத்தப்பட்ட விவகாரம் உலகளவில் கண் டனங்களை எழுப்பியது. இந்த அண்மைய விடுவிப்புக்கு முன்னர் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 276 பேரில் சுமார் 195 பேரைக் காணவில்லை என்று அரசாங்கம் தெரிவித்தது.