டான்சானியாவில் பள்ளிக்கூட பேருந்து பள்ளத்தில் விழுந்ததில் 36 பேர் பலி

அருஷா: கிழக்கு ஆப்பிரிக்க நாடான டான்சானியாவில் பள்ளி சிறுவர்களை ஏற்றிச்சென்ற ஒரு பேருந்து சாலையைவிட்டு விலகி ஆழமான பள்ளத்தில் விழுந்ததில் அந்த பேருந்தில் சென்ற 36 பேர் உயிரிழந்தனர் என்றும் அவர் களில் 33 பேர் சிறுவர்கள் என்றும் அதிகாரிகள் கூறினர். அந்த பேருந்தில் சென்ற சிறுவர்கள் அனைவரும் 12 வயதுக்கும் 13 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றும் தேர்வு எழுதுவதற்காக மாணவர் கள் மற்றொரு பள்ளிக்கூடத்திற்குச் சென்று கொண்டிருந்த போது சனிக்கிழமை விபத்து நிகழ்ந்ததாகவும் போலிசார் கூறினர். அந்தப் பேருந்து, அருஷா நகரில் இயற்கை எழில்மிக்க, மரங்களும் செடிகளும் நிறைந்த மலைப் பகுதியில் ஆற்றங் கரையோரமாக சென்று கொண்டி ருந்தபோது ஆற்றங்கரை ஓரமாக உள்ள பெரிய பள்ளத்தில் விழுந்ததாக போலிஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

டான்சானியாவில் பள்ளிக்கூட சிறுவர்களை ஏற்றிச்சென்ற ஒரு பேருந்து குன்றுகள் நிறைந்த பகுதியில் சாலையைவிட்டு விலகி பெரிய பள்ளத்தில் விழுந்ததில் சிறுவர்கள் 33 பேர் உட்பட 36 பேர் உயிரிழந்தனர். அந்த இடத்தில் குடியிருப்பாளர்கள் கூடியுள்ளனர். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!