ஜகார்த்தா ஆளுநருக்கு இரண்டு ஆண்டு சிறை

ஜகார்த்தா: பதவி விலகவிருக்கும் ஜகார்த்தா ஆளுநர் பசுக்கி ஜஹாஜா புர்னாமாவுக்கு சமய நிந்தனை குற்றச்சாட்டின் பேரில் ஜகார்த்தாவில் உள்ள ஒரு மாவட்ட நீதிமன்றம் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய விரும்பு வதாக புர்னாமா தெரிவித்துள்ள போதிலும் அவருக்கு விதிக்கப் பட்ட தண்டனையை உடனடியாக நிறைவேற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவர் மத்திய ஜாவாவில் உள்ள சிபினாங் சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டதாக தகவல்கள் கூறின.

அஹோக் என்றழைக்கப்படும் புர்னாமா, ஈராண்டுகள் நன்னடத்தைக் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட வேண்டும் என்று முன்னதாக அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் பரிந்துரைத்தனர். நீதிமன்றத் தீர்ப்பு அந்த பரிந்துரையைவிட மிகக் கடுமை யானது என்று புர்னாமாவின் வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர். ஜகார்த்தா ஆளுநராக இருந்த திரு ஜோக்கோ விடோடோ தேர்தலில் வெற்றி பெற்று அதிபர் பொறுப்பை ஏற்ற பின்னர் திரு புர்னாமா, ஜகார்த்தா ஆளுநராக நியமிக்கப்பட்டார். திரு புர்னாமா கிறிஸ்துவ சமயத்தைச் சேர்ந்த சீனராவார். மக்கள் மத்தியில் திரு புர்னாமாவுக்கு நல்ல செல்வாக்கு இருந்து வந்தது.

ஜகார்த்தா ஆளுநர் பசுக்கி புர்னாமா. படம்: ராய்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!