ஜேம்ஸ் கோமே நீக்கப்பட்டதற்கு டிரம்ப் கூறும் புதிய காரணம்

வா‌ஷிங்டன்: அமெரிக்காவில் மத்திய புலனாய்வுத் துறை இயக்குநர் ஜேம்ஸ் கோமேயை அதிபர் டிரம்ப் பதவி நீக்கம் செய்ததற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வருகின்றன. இந்நிலையில் திரு டிரம்ப் தற்போது வேறு ஒரு காரணத்தைக் கூறியுள்ளார். அமெரிக்க நீதித்துறை உயர் அதிகாரிகள் இருவர் பரிந்துரைத்ததற்காக மட்டும் திரு கோமேயை பதவி நீக்கம் செய்யவில்லை என்று கூறிய திரு டிரம்ப், திரு கோமேயைப் பற்றி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். என்பிசி நிறுவனத்திற்கு டிரம்ப் அளித்த பேட்டியில் அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யா தலையிட்டதாகக் கூறப்படுவதும் டிரம்ப் பிரசாரக் குழுவினருக்கும் ரஷ்ய அதிகாரிகளுக்கும் தொடர்பு இருந்ததாகக் கூறப்படுவதும் கட்டுக்கதை என்று குறிப்பிட்டார். ஜனநாயகக் கட்சியினர் தேர்தலில் தோல்வி அடைந்ததற்கு கூறும் காரணங்கள் இவை என்று திரு டிரம்ப் கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!