மாடியிலிருந்து விழுந்த தாதி பிழைத்தார்; ஆனால் மருத்துவர் மாண்டார்

காலி: கொலம்பியாவின் காலி நகரில் உள்ள ஒரு மருத்துவமனையின் 6வது மாடியிலிருந்து தவறிவிழுந்த ஒரு தாதி, அந்த வழியாக நடந்துவந்துகொண்டிருந்த ஒரு மருத்துவர் மீது விழுந்தார். அந்தச் சம்பவத்தில் இருவரும் காயம் அடைந்தனர். டெல் வேல் பல்கலைக்கழக மருத்துவமனையில் படித்து வந்த பெண் மருத்துவர் இசபெல் முனொஸ் பலத்த காயங்களால் உயிரிழந்தார். செவிலியர் மரியா இசபெல் கோன்சேலசுக்குப் எலும்பு முறிவுகள் ஏற்பட்டாலும் தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகக் கூறப்படுகிறது. “என்ன நடந்தது என்பதே எங்களுக்குத் தெரியவில்லை,” என்று மருத்துவமனை இயக்குநர் கூறினார். காவல்துறை அதிகாரிகள் இது தொடர்பான விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

Loading...
Load next