அமெரிக்க கப்பல் விபத்து: ஏழு வீரர்கள் இறந்துகிடந்தனர்

யோகோசுகா: அமெரிக்க கடற் படைக் கப்பல் விபத்துக்கு உள்ளானதில் காணாமல்போன வீரர்கள் கப்பலில் உள்ள அறை களில் புகுந்த நீரில் மூழ்கி இறந்து கிடந்தனர். இந்த விபத்தில் காணாமல் போனதாகக் கூறப்பட்ட ஏழு வீரர் களும் இறந்துவிட்டனர் என்று ஜப் பானிய ஊடகம் தெரிவித்தது. “கப்பலில் உள்ள அறை களுக்குள் நுழைந்த முக்குளிப் போர் அங்கு வீரர்கள் இறந்து கிடந்ததைக் கண்டுபிடித்தனர்,” என்று நேற்று வெளியிட்ட அறிக்கையில் அமெரிக்க ஏழாவது கடற்படையும் கூறியது. இதற்கு முன்பு வெளியிடப்பட்ட அறிக்கையில் கப்பல் சிப்பந்திகள் அனைவரும் அமெரிக்க கடற் படை மருத்துவமனைக்கு மாற்றப் பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப் பட்டது.

சனிக்கிழமை ‘யுஎஸ்எஸ் ஃபிட்ஸ்ஜெரால்ட்’ என்ற அமெ ரிக்க கடற்படையைச் சேர்ந்த நாச காரி கப்பல், மற்றொரு சரக்குக் கப்பலுடன் மோதியது. பிலிப்பீன்ஸ் கொடி பறக்க விடப்பட்ட சரக்குக் கப்பலில் ஏராளமான கொள்கலன்கள் ஏற்றப் பட்டிருந்தன. இதனால் அமெரிக்க கப்பலைவிட சரக்குக் கப்பலின் எடை அதிகமாக இருந்தது.

அமெரிக்க கடற்படைக் கப்பலில் இருந்த அறைகளில் வீரர்கள் இறந்துகிடந்தனர். படம்: ஏஎஃப்பி

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மரங்களுக்கிடையே மறைந்திருக்கும் பண்ணை வீட்டின் ஒரு ரகசிய அறையில் ஒன்பது ஆண்டுகளாக ஒரு குடும்பம் தலைமறைவாக வாழ்ந்து வந்துள்ளது. படம்: ஏஎஃப்பி

17 Oct 2019

ஒன்பது ஆண்டுகளாக பண்ணை வீட்டின் ரகசிய அறையில் வாழ்ந்து வந்த குடும்பம்