சுடச் சுடச் செய்திகள்

இந்தோனீசியாவில் முழு விழிப்புநிலை

டராகான் (வடக்கு கலிமந்தான்): மராவி நகரிலிருந்து அகதிகளைப் போன்று பயங்கரவாதிகளும் நாட்டுக்குள் நுழைந்துவிடலாம் என்பதால் இந்தோனீசியாவின் பாதுகாப்புப்படை முழு விழிப்பு நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தெற்கு பிலிப்பீன்சில் உள்ள மராவி நகரை மாட், அபு சயாஃப் பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான போராளிகள் முற்றுகையிட்டுள்ளனர். இந்நிலையில் அங்கிருந்து அகதிகளைப் போன்று போராளிகள் நுழையலாம் என்று இந்தோனீசியா அஞ்சுகிறது. இந்தோனீசியா, மலேசியா, வட்டார நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டு போராளிகளையும் உள்ளடக்கிய பயங்கரவாதிகளுக்கும் பிலிப்பீன்ஸ் ராணு வத்துக்கும் இடையே மோதல் நான்காவது வாரமாக நீடித்து வருகிறது. இந்த நிலையில் மராவியிலிருந்து வெளியேறிய சுமார் 200,000 குடியிருப்பாளர்களுடன் போராளிகள் கலந்திருக்கலாம் என்று பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon