மலேசியாவின் உணவுப்பொருள் வரி விதிப்பு திட்டம் ரத்து

பெட்டாலிங் ஜெயா: மலேசியா வரும் ஜூலை 1ஆம் தேதியிலிருந்து 60 வகையான உணவு பொருட்களுக்கு ‘ஜிஎஸ்டி’ எனும் பொருள் சேவை வரி விதிக்கப்படும் என்று அறிவித்திருந் தது. ஆனால் இந்தத் திட்டம் கைவிடப் பட்டதாக நேற்று காலை தெரிவிக்கப் பட்டது. நிதி அமைச்சுடன் ஆலோசனை நடத்திய பிறகு வரி விதிப்பு திட்டம் ரத்து செய்யப்படும் முடிவு எடுக்கப் பட்டதாக சுங்கத்துறையின் தலைமை இயக்குநர் சுப்பிரமணியம் துளசி தெரி வித்தார். “இந்த விவகாரத்தில் நிதி அமைச் சின் கருத்து அறியப்பட்டது. இதை யடுத்து வரி விதிப்பு உத்தரவு ரத்து செய்யப்பட்டது,” என்றார் அவர்.

தேநீர், காபி, சில வகை மீன்கள், சோளம், பதப்படுத்தப்பட்ட காய்கறிகள், இறக்குமதி செய்யப்படும் அவோ காடோ, ஆப்ரிகாட், அத்திப்பழம் உள் ளிட்ட உணவுப்பொருட்களுக்கு ஆறு விழுக்காடு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்று முன்பு சுங்கத் துறை அறிவித் தது. பீ ஹுன், லக்சா, மீ, தேங்காய் எண்ணெய் போன்ற பொருட்களுக்கும் வரி விதிக்கப்படுவதாக இருந்தது. இவற்றில் பெரும்பாலானவை மலே சியர்கள் அன்றாடம் அதிகம் பயன் படுத்தாத உணவுப்பொருட்கள் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் 60 உணவுப் பொருட் களுக்கு வரி விதிக்கும் திட்டம் ஏன் கைவிடப்பட்டதற்கான காரணங்களை மலேசிய சுங்கத்துறை வெளியிடவில்லை.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஹாங்காங் பலதுறைத் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் வெளியே கிடக்கும் கற்களை அப்புறப்படுத்தும் பணியாளர்கள். படம்: ராய்ட்டர்ஸ்

21 Nov 2019

ஹாங்காங்: மாவட்ட நிர்வாக மன்றத்தின் தேர்தல் நடைபெற ஒத்துழையுங்கள்

புதிய அதிபராக பொறுப்பு ஏற்ற கோத்தபய ராஜபக்சேயை அவரது அலுவலகத்தில் சந்தித்த இந்திய வெளியுறவு அமைச்சர் திரு ஜெய்சங்கர். படம்: டாக்டர் ஜெய்சங்கர் டுவிட்டர்

21 Nov 2019

பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று இந்தியா செல்கிறார் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே

கோலாலம்பூரில் நாடாளுமன்றக் கட்டடத்திற்கு வெளியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும் கெஅடிலான் ரக்யாட் கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம். படம்: பெர்னாமா

21 Nov 2019

அன்வார் இப்ராஹிம்: ரகசிய சந்திப்புகள் வேண்டாம்