டிரம்ப்: சீனாவின் முயற்சி தோல்வி அடைகிறது

வா‌ஷிங்டன்: வடகொரிய விவ காரத்திற்குத் தீர்வு காண சீனா உதவ விரும்புகிறது என்றும் ஆனால் அதன் முயற்சி தோல்வி அடைகிறது என்றும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரி வித்துள்ளார். வடகொரியா அதன் அணு வாயுதத் திட்டத்தைக் கைவிடு வதற்கு சீனாவின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்று திரு டிரம்ப் கூறியுள்ளார். சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் திரு டிரம்ப்பும் ஃபுளோரிடாவில் கடந்த ஏப்ரல் மாதம் சந்தித்துப் பேசியபோது வடகொரியாவின் அத்துமீறிய நடவடிக்கைகள் குறித்து பேச்சு நடத்தினர். அப்போது வடகொரியாவின் செயல்களை சீன அதிபர் குறை கூறியிருந்தார். வடகொரியப் பிரச்சினைக் குத் தீர்வு காண சீனா எடுத்து வரும் முயற்சிகளை திரு டிரம்ப் பாராட்டியிருந்தார். வடகொரியா தொடர்ந்து அணுவாயுத சோதனைகளையும் ஏவுகணை சோதனைகளையும் மேற்கொண்டு வருகிறது.

அமெரிக்காவும் ஐநாவும் வடகொரி யாவுக்கு எதிராக பல தடைகளை விதித்துள்ள போதிலும் வட கொரியா அதன் சோதனைகளை நிறுத்தவே இல்லை. வடகொரியா அண்மையில் அடுத்தடுத்து பல ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டது. அந்த சோதனைகளுக்கு தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ள போதிலும் வடகொரியா தொடர்ந்து சினமூட்டும் செயலில் ஈடுபட்டு வருகிறது. வடகொரியா மற்றும் ஒரு அணுவாயுத சோதனைக்குத் தயாராகி வருவதாக தென் கொரியா தெரிவித்துள்ளது. தென்கொரியாவை வட கொரியா தாக்கினால் சரியான பதிலடி கொடுக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்து வருகிறது. வடகொரியாவுக்கு எதிராக கூடுதல் தடைகள் விதிக்கப்பட வேண்டும் என அமெரிக்கா வலி யுறுத்தி வருகிறது. இந்நிலையில் வடகொரியாவை மேலும் தனிமைப் படுத்தும் வகையில் கடுமையான தடைகளை விதிக்க வேண்டாம் என்று சீனா கூறி வருகிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மலேசிய உள்துறை அமைச்சர் முகைதின் யாசின். படம்: ஊடகம்

09 Dec 2019

‘மலேசியாவின் அமைதியைக் குலைப்போருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்’

ஹாங்காங்கின் ஜனநாயக ஆதரவாளர்கள் தங்களின் ஐந்து கோரிக்கைகளை வெளிப்படுத்தும் வகையில் கைகளை உயர்த்தியவாறு நேற்றைய பேரணியில் பங்கேற்றனர். படம்: இபிஏ

09 Dec 2019

ஆர்ப்பாட்டங்களின் ஆறுமாத நிறைவை முன்னிட்டு ஹாங்காங்கில் பேரணி