சுடச் சுடச் செய்திகள்

ரசாயனத் தாக்குதலுக்கு சிரியா திட்டம்; அமெரிக்கா எச்சரிக்கை

வா‌ஷிங்டன்: சிரியாவில் மீண்டும் ஒரு ரசாயனத் தாக்குதல் நடத்த சிரியா அரசாங்கம் தயாராகி வருவது போல் தெரிகிறது என்று வெள்ளை மாளிகை தெரிவித் துள்ளது. சிரியா அரசாங்கம் அத்தகைய தாக்குதலை நடத்தினால் அதற்கு சரியான பதிலடி கொடுக்கப்படும் என்றும் அத்துடன் கடுமையான விளைவுகளை அந்நாடு சந்திக்க நேரிடும் என்றும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. சிரியாவில் கடந்த ஏப்ரல் மாதத்தில் கிளர்ச்சியாளர் கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ரசாயனத் தாக்குதலாக இருக் கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.

அத்தாக்குதலில் 80க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். அத்தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்பு சிரியாவில் தென்பட்ட அதே செயல்பாடுகள் இப்போதும் நிலவு வதாக வெள்ளை மாளிகை தெரி வித்துள்ளது. சிரியா அதிபர் ஆசாத்தின் அரசாங்கம் மீண்டும் ஒரு ரசாயனத் தாக்குதலை நடத்தினால் அது மிகப்பெரிய அளவில் மக்கள் கொல்லப்படுவதாக அமையும் என்று அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப் பிடப்பட்டுள்ளது.

மேலும் “முன்பே நாங்கள் தெரிவித்திருந்தபடி ஈராக் மற்றும் சிரியாவில் இருந்து இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக் கொள்ளும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களை துடைத்தொழிக்க சிரியாவில் அமெரிக்க ராணுவம் முகாமிட் டுள்ளது. ஆனால், ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தி அதிபர் ஆசாத் மீண்டும் ஒரு பெரிய அளவிலான கொலைத் தாக்குதலில் ஈடுபட்டால், அவரும் அவரது ராணுவமும் கடும் விளைவை சந்திக்க நேரிடும்’’ என்று அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவித்துள்ளது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon