வெனிசுவேலா நீதிமன்றத்தின் மீது ஹெலிகாப்டர் மூலம் குண்டுவீச்சு

கராகஸ்: தென் அமெரிக்க நாடான வெனிசுவேலாவில் உச்ச நீதிமன்றத் தின் மீது ஹெலிகாப்டர் மூலம் துப்பாக்கிச் சூடு மற்றும் கையெறி குண்டுவீச்சு தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது. அதனைப் பயங்கர வாதத் தாக்குதல் என்று அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோ தெரி வித்துள்ளார். சமூக ஊடகங்களில் வெளியான காணொளியில், துப்பாக்கிக் குண்டுகள் மற்றும் வெடிப்பு சத்தம் கேட்பதற்குமுன், காவல் துறை ஹெலிகாப்டர் ஒன்று நகரத்தைச் சுற்றி வட்டமிட்டபடி பறந்த காட்சிகள் வெளியாயின.

அந்த ஹெலிகாப்டரை ஓட்டிச் சென்றவர் என்று கருதப்படும் போலிஸ் அதிகாரி ஒருவர், தான் வெளியிட்டிருந்த அறிக்கை ஒன்றில் அரசாங்கத்தைக் குற்றம் புரிந்த அரசு என்று குற்றம் சாட்டியிருந்தார். ஆஸ்கர் பெரெஸ் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட அந்த போலிஸ் அதிகாரி இப்போது எங்கிருக்கிறார் என்பது தெரிய வில்லை. வெனிசுவேலாவில் அரசியல் மற்றும் பொருளியல் நெருக்கடி இருந்துவரும் நிலையில் அதிபர் மதுரோவுக்கு எதிராக அங்கு பல மாதங்களாக மிகப்பெரிய அள விலான போராட்டங்கள் நடந்து வருகின்றன.

வெனிசுவேலாவில் உச்ச நீதிமன்றம் மற்றும் உள்துறை அமைச்சு கட்டடத்தின் மீது தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்ட ஹெலிகாப்டரை ஓட்டிச் சென்றவர் என்று கருதப்படும் போலிஸ் அதிகாரி ஆஸ்கர் பெரெஸ், ரகசியமான ஓரிடத்தில் அறிக்கை ஒன்றை வாசிக்கிறார். ராணுவ சீருடை அணிந்திருந்த அந்த அதிகாரிக்குப் பக்கத்தில் ஆயுதம் ஏந்திய முகமூடியணிந்த நபர்கள் நிற்கின்றனர். படம்: ராய்ட்டர்ஸ்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon