பிலிப்பீன்ஸ் கடல் பகுதியில் அமெரிக்காவுடன் சுற்றுக்காவல் பணி

மணிலா: தெற்கு பிலிப்பீன்ஸ் கடல் பகுதியில் அமெரிக்க மற்றும் பிலிப்பீன்ஸ் கடற்படை கப்பல்கள் கூட்டாக சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டுள்ளன. கடற்கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பது இதன் நோக்கம் என்று அவ்விரு நாடுகளும் வெளியிட்ட கூட்டறிக்கை தெரிவித்தது. பிலிப்பீன்ஸ் அரசாங்கம் கேட்டுக்கொண்டதன் பேரில் அமெரிக்க கடற்படைக் கப்பல்கள் சுற்றுக்காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கத் தூதரகம் தெரிவித்தது.