தென்சீனக் கடல் பகுதியில் அமெரிக்க போர்க்கப்பல்: சீனா கண்டனம்

பெய்ஜிங்: தென்சீனக் கடல் பகுதியில் சர்ச்சைக்குரிய தீவுக்கு அருகே அமெரிக்க போர்கப்பல் ஒன்று காணப் பட்டதைத் தொடர்ந்து அமெரிக்காவை சீனா சாடி யுள்ளது. அமெரிக்காவின் அந்த நடவடிக்கை சின மூட்டும் செயல் என்று சீனா தெரிவித்துள்ளது. தீவு கூட்டங்களில் ஒன் றான சிறிய பரப்பளவு கொண்ட டிரைடன் தீவை சீனா ஆக்கிரமித்துள்ளது. இந்தத் தீவுக்கு தைவான், வியட்னாம் ஆகிய நாடுகளும் சொந்தம் கொண்டாடி வருகின்றன.

இந்நிலையில் அமெரிக்காவின் போர்க் கப்பல் ஒன்று டிரைடன் தீவுக்கு அருகே ஞாயிற்றுக் கிழமை பயணம் செய்தது. இதனால் சீனா அதன் ராணுவ கப்பல்களையும் போர் விமானங்களையும் அந்தப் பகுதிக்கு அனுப்பிய தாக பெய்ஜிங் தகவல்கள் கூறின. அமெரிக்க அதிபர் டிரம்பும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் தொலைபேசியில் உரையாடு வதற்கு சில மணி நேரங் களுக்கு முன்னதாக சீனா அந்த நடவடிக்கையை எடுத் தது. அந்த தொலைபேசி உரை யாடலின்போது சீன அதிபர் ஜின்பிங், எதிர்மறை யான நடவடிக்கைகள் சீனா- அமெரிக்கா உறவைப் பாதிக் கும் என்று திரு டிரம்ப்பிடம் கூறியதாக சீன தொலைக் காட்சி தெரிவித்தது. தென்சீனக் கடல் பகுதியில் நடந்த சம்பவம் பற்றி அவ்விரு தலைவர் களும் விவாதித்தனரா என் பது தெரியவில்லை என்று வெள்ளை மாளிகை தெரி வித்தது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon