பிரதமர் லீ: வர்த்தக எதிர்ப்பு உணர்வுகள் பல மில்லியன் மக்களை பாதிக்கும்

ஹம்பர்க்: வர்த்தகத்திற்கு எதிரான உணர்வுகள் உலகில் மில்லியன் கணக்கான மக்களைப் பாதிக்கும் என்று கூறிய சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், வர்த்தகம் மூலம் கிடைக்கும் பலன்களை மக்களுக்கு சமமாக பகிர்ந்து கொடுக்க வேண்டும் என்று ஜி20 நாடுகளின் தலைவர்களைக் கேட்டுக்கொண்டார். வர்த்தக எதிர்ப்பு உணர்வுகள் மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையைப் பாதிக்கும் என்பதால் இந்த உணர்வு மேலும் பல நாடுகளுக்குப் பரவினால் அதிக ஆபத்துகள் இருப்பதாகவும் திரு லீ கூறினார். அவர் ஹம்பர்க் நகரில் ஜி20 மாநாட்டில் உரையாற்றியபோது இவ்வாறு கூறினார்.

Loading...
Load next