டிரம்ப் சுகாதார கவனிப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு

வா‌ஷிங்டன்: அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அறிவித்த சுகாதார கவனிப்பு திட்டத்திற்கு மேலும் இரு குடியரசுக் கட்சி செனட்டர்கள் எதிர்ப்பு தெரிவித் ததைத் தொடர்ந்து அந்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் படுவது இயலாத காரியம் என்று தெரிகிறது. ஒபாமா சுகாதார கவனிப்புத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு அதற்குப் பதிலாக புதிய திட்டத்தை நிறை வேற்றும் முயற்சியில் திரு டிரம்ப் ஈடு பட்டுள்ளார். புதிய திட்டத்திற்கு குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் மைக் லீ, ஜெர்ரி மோரன் ஆகிய இரு செனட்டர்களும் தற்போது அத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

முந்தைய சுகாதாரத் திட் டத்தை ரத்து செய்யும் அளவுக்கு போதுமான அம்சங்கள் டிர்ம்ப் முன்மொழிந்துள்ள திட்டத்தில் இல்லை என்று அவ்விருவரும் கூறுகின்றனர். ஏற்கெனவே இரு செனட்டர்கள் அத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனவே டிரம்ப் சுகாதார கவனிப்பு திட்டம் குறித்து குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் பிளவுபட்டுள்ளனர். இதனால் புதிய சுகாதார மசோதாவை நிறைவேற்றும் முயற்சியை குடியரசுக் கட்சியினர் கைவிட்டனர். இருப்பினும் ஒபாமா சுகாதார கவனிப்புத் திட்டத்தை ரத்து செய்வது குறித்து அடுத்து வரும் நாட்களில் செனட் சபையில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று செனட் பெரும்பான்மை தலைவர் மிட்ச் மெக்கோனல் கூறினார்.