மலேசியா: குண்டர் கும்பலைச் சேர்ந்த 62 பேர் பிடிபட்டனர்

கோலாலம்பூர்: மூன்று மாநிலங்களில் போலிசார் நடத்திய தேடுதல் வேட்டையில் குண்டர் கும்பல்களைச் சேர்ந்த 62 பேர் கைது செய்யப்பட்ட தாக மலேசிய தலைமை போலிஸ் அதிகாரி காலிட் அபுபக்கர் தெரி வித்துள்ளார். செவ்வாய்க்கிழமை முதல் சிலாங்கூர், பினாங்கு, கெடா ஆகிய மாநிலங்களில் தங்களது சோதனையை வெற்றிகரமாக நடத் தியதற்கு தமது டுவிட்டர் செய்தியில் திரு அபுபக்கர் வாழ்த்துத் தெரிவித் துள்ளார். சோதனை தொடருவதாக வும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், ‘கேங் 360 தேவன்’ என்னும் கும்பலின் உறுப்பி னர்கள் என்று கருதப்படும் 16 பேர் நேற்று உயர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டனர்.

அந்த 16 ஆட வர்களும் 24க்கும் 48க்கும் இடைப் பட்ட வயதினர். நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப் பட்ட அவர்களின் பெயர்கள் வாசிக் கப்பட்டன. டி.ஆர்.யசோதரன், எஸ். மணிமாறன், சி.முருகன், எல்.லெங் காஸ் செபரன், டி.சிவானந்தா, எஸ்.டி.அந்தோணி பாலன், எஸ். மாறன், எம்.சத்யா தமிழ் சிவா, பி.சுரேஷ், பி.முருகன், பி.ரவிந்திரன், டி.ஆர்.யசோதனராஜ், எம்.முருகன், டி.மணிவண்ணன், கே.ராம்குமார், எஸ்.லோகநாதன் ஆகியோர் அந்த 16 பேர். கடந்த 2015 ஜனவரி 1ஆம் தேதிக்கும் இவ்வாண்டு ஜூன் 3ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் குண்டர் கும்பலில் உறுப்பினர்களாக இருந்ததற்காக குற்றம் சாட்டப்பட் டனர்.

குற்றப் பத்திரிகை ஒவ்வொரு வருக்கும் தமிழில் வாசிக்கப்பட்டது. உயர் நீதிமன்றத்தின் முன்பாக உள்ள கட்டடத்தின் ஐந்தாவது மாடி யில் சுமார் 100 குடும்ப உறுப் பினர்கள் குழுமியிருந்தனர். குற்றம் சாட்டப்படும் நடவடிக்கையை நீதி மன்ற அறைக்கு வெளியே வைக் கப்பட்டு இருந்த பெரிய திரைகளில் அவர்கள் பார்த்தனர். ஆயுதம் தாங் கிய ஏராளமான போலிசார் நீதிமன்ற அறையில் காணப்பட்டதாக ‘த ஸ்டார்’ இணையத்தளம் தெரிவித் தது. இதற்கு முன்னதாக இதே போன்ற செயலுக்காகக் குற்றம் சாட்டப்பட்ட இதர 36 பேருடன் சேர்த்து இந்த 16 பேரையும் விசா ரிக்க வேண்டுமென அரசுத்தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. வழக்கு விசாரணை அக்டோபர் 2ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை நடைபெறும் என்று நீதிபதி தெரிவித்தார்.