சுடச் சுடச் செய்திகள்

சீனாவில் குழந்தை பிறப்பு விகிதம் இந்த ஆண்டு அதிகரிப்பு

பெய்ஜிங்: சீனாவில் பெற்றோர்கள் இரு குழந்தைகளை பெற்றுக் கொள்ளலாம் என்ற சட்டம் சென்ற ஆண்டு தொடக்கத்தில் நடப்புக்கு வந்ததிலிருந்து சீனாவில் குழந்தை பிறப்பு விகிதம் அதிகரித்துள்ளது. அதிலும் அதிகமான பெற்றோர் இரண்டாவது குழந்தை பெற்றுக் கொண்டதே குழந்தை பிறப்பு விகிதம் அதிகரித்ததற்கு முக்கிய காரணம் என்று துணை அமைச்சர் ஒருவர் கூறினார். இந்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கும் மே மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் குழந்தை பிறப்பு எண்ணிக்கை 7.4 மில்லியன் என்றும் சென்ற ஆண்டு இதே காலக்கட்டத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் இது 7.8 விழுக்காடு அதிகம் என்றும் தேசிய சுகாதார, குடும்ப கட்டுப்பாட்டு ஆணையத் தின் துணை அமைச்சர் வாங் கூறினார். இந்த ஆண்டு முதல் 5 மாதங்களில் பிறந்த குழந்தைகளில் 57.7 விழுக்காடு குழந்தைகள் பெற்றோர்களின் இரண்டாவது குழந்தைகள் என்று அமைச்சர் சொன்னார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon