சுடச் சுடச் செய்திகள்

44 பேரை நாடு கடத்த பிலிப்பீன்ஸ் நடவடிக்கை

மணிலா: பிலிப்பீன்சில் சென்ற வாரம் சிங்கப்பூர் மாது ஒருவர் கடத்தப்பட்டதன் தொடர்பில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டினர் 44 பேரை நாடு கடத்துவதற்கான நடை முறைகளை குடிநுழைவுத் துறை அதிகாரிகள் கவனிக்கத் தொடங்கி யுள்ளனர். அக்கடத்தலில் சம்பந்தப்பட்ட வர்கள் என்று சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட சீனாவைச் சேர்ந்த 42 பேர் மற்றும் மலேசி யாவைச் சேர்ந்த இருவர் இந்த வாரம் தொடக்க விசாரணைக்கு உட்படுத்தப்படுவர் என்று குடிநுழைவுத் துறை ஆணையாளர் ஜெய்மி மெரண்ட் கூறினார். அக்கடத்தல் சம்பவம் தொடர்பில் அந்த சந்தேக நபர்கள் மீது குற்றம் சாட்டப்படும் என்றும் அவர் சொன்னார். குடிநுழைவு சம்பந்தப் பட்ட இந்த வழக்கு நீதித்துறை தாக்கல் செய்துள்ள கிரிமினல் குற்றச் சாட்டுகளிலிருந்து வேறு பட்டது என்று கூறப்படுகிறது. அந்த சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார் கள் என்றும் அவர்கள் குற்ற வாளிகள் என தீர்ப்பளிக்கப் பட்டால் அதற்கான தண்டனையை அனுபவித்த பிறகு அவர்களின் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

குற்றச்சாட்டுகளிலிருந்து அவர் கள் விடுவிக்கப்பட்டாலும் அவர் களை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்புவது குறித்து குடிநுழைவுத் துறை அதிகாரிகள் தீர்மானிக்க முடியும் என்று அந்த அதிகாரி கூறினார். சீனாவைச் சேர்ந்த நால்வரிடம் முறையான பயண ஆவணம் இல்லை என்ற போதிலும் அந்த 44 பேரும் சுற்றுலாப் பயணிகளாக பிலிப்பீன்சிற்குள் நுழைந்ததாக தொடக்க புலன்விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் சொன்னார். மணிலாவுக்கு அருகே ஒரு கண்டோமினிய வீட்டின் ஓர் அறையில் அடைத்து வைக்கப் பட்டிருந்த 48 வயது சிங்கப்பூர் மாது வூ யான் என்பவரை பிலிப்பீன்ஸ் போலிசார் சென்ற வாரம் காப்பாற்றினர். அதனைத் தொடர்ந்து சந்தேக நபர்கள் 44 பேர் கைது செய்யப் பட்டனர். சிங்கப்பூர் மாது வூ சிங்கப்பூருக்கு திரும்பிச் சென்றுவிட்டதாக கடத்தல் தடுப்புப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon