சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிக்க டிரம்ப் ஒப்புதல்

வா‌ஷிங்டன்: சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 50 பில்லியன் டாலர் மதிப்புடைய பொருட்களுக்கு இறக்குமதி வரி விதிக்க அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ஒப்புதல் அளித் துள்ளார். வர்த்தகர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் திரு டிரம்ப் இதற்கு ஒப்புதல் அளித்ததாகக் கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அமெரிக்க பொருட் களுக்குச் சீனாவில் 25 விழுக்காடு வரி விதிக்கப்படுகிறது. ஆனால் சீனப் பொருட்களுக்கு அமெரிக் காவில் 2.5% வரி மட்டுமே விதிக்கப்படுகிறது. இது நியாய மான வர்த்தகம் அல்ல என்றும் எனவே சீனாவிலிருந்து இறக்கு மதியாகும் பொருட்களுக்கு வரி விதிக்க இருப்பதாகவும் திரு டிரம்ப் முன்பே அறிவித்திருந்தார்.

மேலும் செய்திகள்:

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!