ஐரோப்பிய ஒன்றிய உச்சநிலை மாநாட்டில் பங்கேற்கும் பிரிட்டிஷ் பிரதமர் தெரேசா மே

லண்டன்: பிரிட்டிஷ் நாடாளுமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்பிப் பிழைத்த பிரதமர் தெரேசா மே, 24 மணி நேரத்திற்குள்ளாகவே ஐரோப்பிய ஒன்றிய உச்சநிலை மாநாட்டில் பங்கேற்க பிரஸ்சல்ஸ் புறப்பட்டார். பிரக்சிட் உடன்பாட்டை எதிர்த்த நாடாளுமன்ற உறுப்பினர் களின் கோரிக்கைகளை தெரேசா மே ஐரோப்பிய தலைவர்களின் முன்னிலையில் வைப்பார் என்று கூறப்படுகிறது. ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கெனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட 'பிரக்சிட்' உடன்பாட்டை மீண்டும் பேச வாய்ப்பு இல்லை என்று கூறி யுள்ளது. அதே சமயத்தில் பிரச்சினை களைக் களைய உதவி வழங்கப் படும் என்று ஐரோப்பிய ஒன்றியம் உறுதி தெரிவித்துள்ளது.

புதன்கிழமை நடைபெற்ற நம் பிக்கை இல்லா தீர்மானத்தில் பிர தமர் மே, 200க்கு 117 வாக்கு களைப்பெற்று வெற்றி பெற்றார். இதன் பிறகு டவ்னிங் ஸ்திரீட் அலுவலகத்தின் முன்பு பேசிய மே, மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப பிரக்சிட் திட்டத்தை நிறைவேற்று வேன் என்று சூளுரைத்தார். இருந்தாலும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அக்கறைக்குரிய விவகாரங்களை கவனத்தில் கொள்வதாகவும் அவர் சொன் னார். ஐரோப்பிய உச்சநிலை மாநாட் டில் பிரக்சிட் திட்டத்தை நிறை வேற்றுவதில் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை பிரதமர் மே விளக்குவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அதன் பிறகு தெரேசா மே இல்லாமல் என்ன செய்ய முடியும் என்பது பற்றி ஐரோப்பிய தலை வர்கள் முடிவு செய்வார்கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!