தகாத முறையில் பெண் பணியாளர்களிடம் நடந்துகொண்ட விமானப் பயணி

சக்கர நாற்காலியில் இருந்த அதிக பருமனான விமானப் பயணி ஒருவரின் உதவிக்கான வேண்டுகோளுக்கு செவிசாய்க்க விமானத்தின் பெண் பணியாளர்கள் தயாராக இருந்தனர். 

ஆயினும், அவரது வேண்டுகோள்கள் பின்னர் எல்லை மீறின. அந்த ஆடவர் கழிவறையில் தனக்கு உதவி செய்ய பெண் பணியாளர்களை வற்புறுத்தியதுடன் ஆபாசமாகவும் பேசியதாகத் தகவல் வெளிவந்தது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருந்து தைவானுக்குப் புறப்பட்டுக்கொண்டிருந்த விமானச் சேவையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

இந்தச் சம்பவத்தை தைவானின் விமானப் பணியாளர் தொழிற்சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது. பயணிகளின் நியாயமற்ற வேண்டுகோள்களை நிராகரிக்கும் உரிமை பணியாளர்களுக்கு உள்ளது என்று அந்தச் சங்கம் வலியுறுத்தியது.