மலேசிய மாமன்னர் இன்று தேர்வு

கோலாலம்பூர்: மலேசியாவின் புதிய மாமன்னர் இன்று தேர்ந்து எடுக்கப்படவுள்ளார். அதற்காக இஸ்தானா நெகாராவில் இன்று காலை 10.30 மணியளவில் நடை பெறும் சிறப்புக் கூட்டத்தில் ஒன்பது மன்னர்களும் பங்கேற்கின்றனர்.
அந்நாட்டின் 15வது மாமன்ன ராக 2016 டிசம்பரில் பதவியேற்ற கிளந்தான் சுல்தான் ஐந்தாம் முகம்மது, தமது பதவிக்காலத்தில் ஈராண்டுகள் மட்டுமே நிறைவு பெற்ற நிலையில் கடந்த மாதம் 6ஆம் தேதி பதவியைத் துறந்தார். இதையடுத்து, துணை மாமன்ன ரான பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா இடைக்கால மாமன்னராக இருந்து வருகிறார்.
சுழற்சி வரிசையில் மலேசிய மாமன்னர் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். நெகிரி செம்பிலான், சிலாங்கூர், பெர்லிஸ், திரெங்கானு, கெடா, கிளந்தான், பாகாங், ஜோகூர், பேராக் என்ற வரிசையில் மாமன்னர் தேர்ந்தெடுக்கப்படுவ தால் அப்பதவி அடுத்ததாக பாகாங் சுல்தானுக்குச் செல்ல வேண்டும். 
தம்முடைய தந்தையார் உடல் நலம் குன்றியிருந்த நிலையில் இடைக்காலமாக பாகாங் மன்ன ராக இருந்து அவரது பணிகளைக் கவனித்து வந்த தெங்கு அப்துல்லா, அண்மையில் அதிகார பூர்வமாக பாகாங் மன்னராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். 
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

விமானத்தின் கூரைக்குத் தூக்கி எறியப்பட்டார்  அந்த விமானத்தின் சிப்பந்தி. படம்: காணொளி ஸ்கிரீன்கிராப்

19 Jun 2019

மோசமான வானிலை காரணமாக ஆட்டம் கண்ட விமானம்: விமானத்தின் கூரைக்கு வீசப்பட்ட சிப்பந்தி

அடுத்த வாரம் ஜப்பானில் நடக்கவுள்ள உச்சநிலை மாநாட்டில் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பும் சீன அதிபர் சீ ஜின்பிங்கும் சந்திக்கவுள்ளனர்.
படம்: ராய்ட்டர்ஸ்

19 Jun 2019

ஜி20 மாநாட்டில் சீன அதிபரைச் சந்திக்க இருப்பதாகக் கூறியுள்ள டிரம்ப்

அடுத்த வாரம் ஜி-20 நாடுகளின் உச்சநிலை மாநாடு ஜப்பானின் ஒசாகா நகரில் நடக்கவுள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

19 Jun 2019

ஜி-20 உச்சநிலை மாநாட்டில் வர்த்தகமும் உலக வர்த்தக நிறுவனத்தின் சீரமைப்பும் விவாதிக்கப்படும்: ஜப்பான்