வெள்ளத்தில் தத்தளிக்கும் குவின்ஸ்லாந்து

குவின்ஸ்லாந்து: கடந்த நூறாண்டு­களில் காணாத வெள்ளப்பெருக்கு ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு பகுதியான குவின்ஸ்லாந்தைப் பாதித்துள்ளது. தொடர்ந்து பெய்யும் கன மழையால் முக்கிய ஆறான டெய்ன்ட்ரீ ஆறு பெருக்­கெடுத்து ஓடுகிறது.
118 ஆண்டுகளுக்குப் பிறகு ஆற்று நீர் 12.6 மீட்டர் உயரத்துக்கு பாய்கிறது.
நகரெங்கும் வெள்ளம் சூழ்ந் துள்ளதால் தொலைத்­தொடர்பு, மின்சாரம் துண்டிக்கப்பட்டது. போக்குவரத்து முடங்கி­யுள்ளது. குவின்ஸ்லாந்தின் பல பகுதிகள் மின்சாரம் இன்றி இருளில் மூழ்­ கியுள்ளன.
ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தங்களது பண் ணையில் வீட்டுக்கு வர முடியாமல் சிக்கிக்கொண்டனர். ஏனெனில் அந்தப் பண்ணையைச் சுற்றி வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. அந்த நீரில் உயர் மின் அழுத்தம் கொண்ட மின்கம்பிகள் அறுந்து விழுந்துள்ளதால் அவர்கள் அந்தப் பண்ணை­யைவிட்டு வெளி­யேற முடியாமல் தவிக்­கின்றனர்.
மக்கள் வீட்டை விட்டு வெளி­யில் எங்கும் செல்ல முடியாமல் முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்­ பட்டுள்ளது.
மழையும் வெள்ளமும் விவசாயி­ களுக்கும் கால்நடை­களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
வெள்ளத்தில் ஏராளமான மாடுகள் அடித்துச்செல்லப்பட்டு உள்ளன. அடித்துச் செல்லப்பட்ட மாடுகளைக் காப்பாற்ற குடியிருப்­பாளர்கள் முகத்துவாரப் பகுதியை நோக்கி விரைந்தனர். பல மாடுகள் கடலில் தத்தளிப்பதைக் காண முடிவதாக ஏஎஃப்பி செய்தி தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!