தமிழ் நேசனின் இறுதி இதழ்

மலேசியப் பத்திரிகை தமிழ் நேசன் இன்றுடன் மூடப்படும். 95 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த இந்த நாளிதழை மலேசிய வாசகர்கள் மட்டுமின்றி சிங்கப்பூர் வாசகர்களும் படித்து வந்தனர்.

சிங்கப்பூர்-மலேசிய தமிழர்களின் அடையாளத்தைப் பிரதிபலிக்கும் வரலாற்றுக் கூறுகளில் ஒன்றாக  ‘தமிழ் நேசன்’ திகழ்ந்து வந்தது. மலேசிய இந்தியர் காங்கிரசின் முன்னைய தலைவர் எஸ். சாமிவேலுவின் குடும்பத்தினர் நடத்தி வந்த இந்த நாளிதழ், வர்த்தகப் பிரச்சினைகளின் காரணமாக மூடப்படுகிறது.

“மீண்டும் வருவோம்” என்ற முழக்கத்துடன் தமிழ் நேசன் தனது வாசர்களுக்குப் பிரியாவிடை கொடுத்துள்ளது.

Loading...
Load next