ஹுவாவெய் போன்ற சீன நிறுவனங்களை தவிர்க்க ஐரோப்பிய ஒன்றியம் திட்டம்

பிரஸ்ஸல்ஸ்: அடுத்த தலைமுறை கைத்தொலைபேசி கட்டமைப்பில் பங்கேற்க ஹுவாவெய் போன்ற சீன நிறுவனங்களுக்குத் தடை விதிக்கும் உத்தேச திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியம் ஆராய்ந்து வருகிறது என்று நான்கு மூத்த ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் கூறியுள்ளனர். இதையடுத்து சீனாவின் ஆகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான ஹுவா வெய்க்கு மேலும் நெருக்கடி அதி கரித்துள்ளது. ஆனால் ஹுவா வெய் நிறுவனத்தை ‘5ஜி’ கட்டமைப்பில் பங்கேற்க முடியாமல் செய்வது சிரமமான காரியம் என்று அந்த அதிகாரிகள் கூறி யுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத் தின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா மட்டும் வரவேற்கலாம் என்று கூறப்படுகிறது.