ஜகார்த்தாவில் இன்று தொடங்கும்  அமெரிக்க-ஆசியான் கருத்தரங்கு 

ஜகார்த்தா: ஜகார்த்தாவில் இன்று தொடங்கும் அமெரிக்க- ஆசியான் பங்காளித்துவ கருத்தரங்கில் பல்வேறு அம்சங்கள் விவாதிக்கப்படவுள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். முக்கியமாக இயற்கை பேரிடர், ஐஎஸ் போராளிகள், கடல் பகுதியில் நிலவும் பதற்றம் ஆகியவை விவாதிக்கப்படவிருப்பதாக கருத்தரங்கு ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் ராபர்ட் பி. கிரியர் கூறினார். இந்தக் கருத்தரங்கில் அமெரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த இளம் தலைவர்களும் சுமார் 70 நிபுணர்களும் கலந்துகொள்கின்றனர். அமெரிக்க- ஆசியான் பங்காளித்துவ உறவை வலுப்படுத்துவது கருத்தரங்கின் முக்கிய நோக்கம்.