பாண்டா அடைப்பில் விழுந்த பெண்

சீனாவின் தேசிய சின்னமானது -பாண்டா கரடி. அவ்விலங்கின் அடைப்புப் பகுதியில் ஒரு பெண் விழும் காணொளி பரவலாக சமூக ஊங்கங்களில் பகிரப்பட்டு வருகிறது. சிசுவான் மாநிலத்தில் அமைந்துள்ள செங்டு பகுதியில் இருக்கும் பெரிய பாண்டா இனப் பெருக்கத்தின் ஆராய்ச்சி நிலையத்தில் இச்சம்பவம் நிகழ்ந்தது. 

 சிவப்பு ஆடை அணிந்த அந்தப் பெண், அடைப்புக்குள் விழுந்தபின் பாண்டா கரடிகள் அந்தப் பெண்ணை நோக்கி வருவது அந்தக் காணொளியில் தெரிகிறது. 

ஒரு மூங்கில் கிளையைக் கொண்டு பாதுகாப்பு அதிகாரி ஒருவர் அந்தப் பெண்ணை மீட்க முயற்சி செய்திருந்தார். ஆனால் அது வெற்றி பெறவில்லை. 
பிறகு அவர் தன் கையை வைத்து அந்தப் பெண்ணை எட்டிப் பிடித்து வெளியே இழுத்தார். 

சில சுற்றூலாப் பயணிகளும் பார்வையாளர்களும் அதிர்ச்சியில் கதறினர் என்றும் அந்தப் பெண்ணுக்கோ பாண்டா கரடிக்கோ காயம் எதும் ஏற்படவில்லை என்றும் சீன ஊடகமான ‘சினா’ தெரிவித்தது. 
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கிறைஸ்ட்சர்ச் நகரின் அல் நூர் பள்ளிவாசலின் முன்பு நடைபெற்ற மாபெரும் சிறப்புத் தொழுகையிலும் மௌன அஞ்சலி நிகழ்விலும் பிரதமர் ஜெசிண்டா ஆர்டன் முக்காடு அணிந்து பங்கேற்றார். படம்: ராய்ட்டர்ஸ்

23 Mar 2019

நாடளாவிய மௌன அஞ்சலி