பக்கத்தான் ஹரப்பான் ஆட்சிக் கவிழ்ப்பு குற்றச்சாட்டைத் தட்டிக்கழித்த அன்வார்

ஷா ஆலம்: பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கத்தின் ஆட்சிக் கவிழ்க்கப்படவுள்ளதாக எதிர்க்கட்சி ஒன்று முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் பகிரங்கமாக கூறியுள்ளார்.
அம்னோ கூட்டணியிடமிருந்து 90 மில்லியன் ரிங்கிட்டை (S$30 மில்லியன்) பாஸ் கட்சி பெற்ற விவகாரத்தை அது மூடி மறைப்பதற்காக இந்தக் குற்றச்சாட்டுகளை அது முன்வைத்துள்ளதாக திரு அன்வார்  கூறினார்.
சிலாங்கூர் பல்கலைக்கழகத்தில் நேற்று உரை நிகழ்த்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், பக்கத்தான் ஹரப்பானின் மற்ற கட்சிகளும் ஆட்சிக் கவிழ்க்கப்படுவது தொடர்பான குற்றச்சாட்டை அலைக்கழித்துள்ளதாக சொன்னார்.
மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மதுடன் தாம் நடத்திய உரையாடலின்போது, ஆட்சிக் கவிழ்ப்பு குறித்த பேச்சு எதுவும் எழவில்லை என்று திரு அன்வார் குறிப்பிட்டார்.