பிணையில் விடுவிக்கப்பட்ட ஜப்பானிய, கொரிய பிரமுகர்கள்

(இடம்) தோக்கியோவில் நிசான் கார் தயாரிப்பு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கார்லோஸ் கோஸ்ன் நேற்று ஒரு பில்லியன் யென் (ஒன்பது பில்லியன் டாலர்) பிணையில் விடுவிக்கப்பட்டார். நிறுவனத்தின் நிதியை தவறாகக் கையாண்ட வழக்கில் அவர் 108 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார். ஆனால் தான் ஓர் அப்பாவி என திரு கார்லோஸ் கோஸ்ன் கூறிவருகிறார். (வலம்) தென்கொரியாவில் பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் அதிபர் லீ மியூங்-பாக் (நடுவில்) தடுப்புக்காவல் நிலையத்திலிருந்து வெளியே வருகிறார். ஊழல், நிதி மோசடி, கையூட்டு தொடர்பான வழக்குகளில் அவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்ய விருக்கிறார். படங்கள்: ஏஎஃப்பி, இபிஏ