நோயால் மடியப்போகும் ஆடவருடன் டிரம்ப்பின் உருக்கமான உரையாடல்

‘சிஸ்டிக் ஃபிப்ரோசிஸ்’ என்ற நோயால் பாதிக்கப்பட்ட ஓர் ஆடவரின் நெடுநாள் கனவு நனவானது. கனெக்டிகட் மாநிலத்தைச் சேர்ந்த 44 வயது ஜே பர்ரட், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பிடம் சிறிது நேரம் தொலைபேசி மூலம் உரையாடும் வாய்ப்பைப் பெற்றார்.

முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவுக்கு வாக்களித்திருந்த திரு பர்ரட், கடந்த தேர்தல் முதல் திரு டிரம்ப்பின் பெரிய விசிறியாக மாறியுள்ளார்.

“உங்களை நினைத்து நான் பெருமை அடைகிறேன்,” என்று திரு டிரம்ப், திரு பர்ரட்டிடம் தொலைபேசி வழி தெரிவித்தார். “உங்களிடம் நான் மீண்டும் பேசுகிறேன், சரியா? தொடர்ந்து போராடுங்கள். இருவருமே போராடுவோம்,” என்றும் திரு டிரம்ப் சொன்னார்.

இன்பத்திலும் துன்பத்திலும் திரு டிரம்ப்புக்கு ஆதரவளித்து வருவதாக திரு பர்ரட்,  திரு டிரம்ப்பிடம் தெரிவித்தார். 2020ஆம் ஆண்டில் தொடர்ந்து உயிர் வாழ்ந்து திரு டிரம்ப்புக்கு வாக்களிக்கப்போவதாகத் திரு பர்ரட் உறுதி தெரிவித்தார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மரங்களுக்கிடையே மறைந்திருக்கும் பண்ணை வீட்டின் ஒரு ரகசிய அறையில் ஒன்பது ஆண்டுகளாக ஒரு குடும்பம் தலைமறைவாக வாழ்ந்து வந்துள்ளது. படம்: ஏஎஃப்பி

17 Oct 2019

ஒன்பது ஆண்டுகளாக பண்ணை வீட்டின் ரகசிய அறையில் வாழ்ந்து வந்த குடும்பம்