எதிர்வரும் இந்தோனீசிய தேர்தலுக்கு ஆயத்தமாகும் அடுத்த தலைமுறை பெண்கள்

இந்தோனீசிய அரசியல் களத்தில் வரலாறு காணாத எண்ணிக்கையில் பிரபல பெண்கள் கட்சிகளை வழிநடத்திவருவதோடு, அடுத்த தேர்தலில் போட்டியிடவும் உள்ளனர்.

உலகின் மூன்றாவது பெரிய ஜனநாயக நாடான இந்தோனீசியாவில் அதிபருக்கான தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதுவரை இந்தோனீசிய மக்கள் நேரடியாகப் பெண் அதிபரைத் தேர்ந்தெடுத்தது இல்லை என்றாலும் இந்தப் பெரும் மாற்றம் காணப்படுகிறது.

இந்தோனீசியாவின் நிறுவனராகக் கருதப்படும் சுகார்னோவின் மகளும் அந்நாட்டின் ஆகப்பெரிய அரசியல் கட்சியின் தலைவியுமான மெகாவதி சுகார்னோபுத்ரி தற்போதைய நிலையிலும் அதிக செல்வாக்குள்ள அரசியல்வாதியாக விளங்குகிறார்.

அவர் இந்தோனீசியாவின் அதிபராக இருந்திருந்தாலும் தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

முன்னாள் அதிபர் சுகார்த்தோவின் இரண்டு மகள்களும் மற்றொரு முன்னாள் அதிபர் அப்துர்ரஹ்மான் வாஹித்தின் மகளும் இந்தத் தேர்தலில் முக்கிய அங்கம் வகிக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

அதிக எண்ணிக்கையில் பெண்கள் அரசியலில் பங்கெடுக்கவேண்டும் என்று தற்போதைய அதிபர் ஜோகோ விடோடோ கூறி வருகிறார். அவரது அமைச்சரவையில் நிதி, வெளியுறவு அமைச்சு போன்ற துறைகளில் எட்டு பெண் அமைச்சர்கள் உள்ளனர்.

193 மில்லியன் வாக்காளர்களுக்கு மேலாக உள்ள நாடு இந்தோனீசியா. உலகில் ஆக அதிகமான முஸ்லிம்கள் வாழும் நாடாகவும் அது உள்ளது.

ஆண்களைவிட பெண்கள் சற்று அதிகமாக இருப்பதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை மெகாவதி மட்டுமே தேர்தலில் போட்டியிட்டுள்ளதையடுத்து இந்தத் தேர்தல் மிகவும் ஆவலுடன் கவனிக்கப்பட்டுவருகிறது.  

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஹாங்காங்கின் மத்திய வட்டாரத்தில் அரசாங்கத்துக்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவாக உயர்நிலைப் பள்ளி மாணவர்களும் நேற்று களத்தில் குதித்தனர். ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கை களை நிறைவேற்ற வேண்டும் என்று மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர். செப்டம்பரில் தொடங்கும் பள்ளி பருவத்தையும் மாணவர்கள் புறக்கணித்துள்ளனர். படம்: இபிஏ

23 Aug 2019

வன்முறை; ஹாங்காங் வங்கிகள் கண்டனம்