மலேசியா: பக்கத்தான் ஹரப்பான் கட்சி மேலும் வலுவடைகிறது 

கோலாலம்பூர்: மலேசியாவை ஆளும் பக்கத்தான் ஹரப்பான் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தைப் பெறும் தறுவாயில் உள்ளது.
பக்கத்தான் ஹரப்பானில் அங் கம் வகிக்கும் நான்கு கட்சிகளில் ஒன்றான மலேசிய பிரிபூமி பெர் சாத்துக் கட்சியின் பலம் கூடியுள்ளதால் கூட்டணியின் பலமும் அதிகரித்தது. 
அண்மையில் பிரிபூமி பெர் சாத்துக் கட்சியில் சாபா மாநிலத் தின் எட்டு அம்னோ தலைவர்கள்  சேர்ந்தனர். 
இதையடுத்து பிரதமர் மகாதீர் தலைமையிலான பிரிபூமி பெர் சாத்துக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 22லிருந்து 26க்கு அதிகரித்தது.
இந்த நான்கு எம்பிக்களுடன் சேர்த்து பக்கத்தான் ஹரப்பானின் மொத்த பலமும் 129க்குக் கூடியது.
சாபா மாநிலத்தைச் சேர்ந்த இரு நட்பு கட்சிகளின் மேலும் பத்து உறுப்பினர்களுடன் சேர்த்து பக்கத்தான் ஹரப்பானுக்கு தற் போது 139 நாடாளுமன்ற உறுப் பினர்கள் உள்ளனர்.
இது, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பலத்துக்குத் தேவையான 148 உறுப்பினர் களில் ஒன்பது மட்டுமே குறை வாக உள்ளது. மலேசிய நாடாளு மன்றத்தின் மொத்த இடங்கள் 222.
பிரதமர் மகாதீர் பலமுறை ஆளும் கூட்டணிக்கு பெரும் பான்மை பலம் இருக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி வந் துள்ளார்.
ஆளும் கூட்டணிக்கு பெரும் பான்மை பலமிருந்தால் எதிர்க் கட்சிகளின் ஆதரவின்றி சட்டத் திருத்தங்களை உடனடியாக நிறை வேற்ற முடியும் என்று அவர் கூறியிருந்தார்.
பிரதமர், முதல்வர் பதவி களுக்கு இரண்டு தவணைக்காலம் வரை வரம்பு விதிக்கவும் அர சாங்கம் விரும்புவதாகவும் அவர் சொன்னார்.
பொதுத் தேர்தலுக்குப் பிறகு மலாய் தேசிய கட்சியான அம்னோ விலிருந்து 12 நாடாளுமன்ற உறுப் பினர்கள் விலகினர். 
இவர்களில் நான்கு பேரை பக்கத்தான் ஹரப்பானில் அங்கம் வகிக்கும் மலேசிய பிரிபூமி பெர் சாத்துக் கட்சி ஏற்றுக் கொண் டது.
எஞ்சிய நாடாளுமன்ற உறுப் பினர்கள் தனித்து செயல்பட்டு வருகின்றனர். சென்ற வெள்ளிக்கிழமை அன்று கட்சியில் இணைந்த நால்வருக்கும் பிரதமர் மகாதீர் கட்சி  உறுப்பினர் அட்டை களை வழங்கினார்.