இந்தோனீசியாவின் பாப்புவா மாகாணத்தில் பெருமழை: 42 பேர் பலி 

ஜக்கர்த்தா: இந்தோனீசியாவின் கிழக்கு மாகாணமான பாப்புவாவின் தலைநகரம் ஜெயபுராவில் சனிக்கிழமை பெய்த பெருமழையில் 42 பேர் உயிரிழந்தனர். இதில் ஏராளமான வீடுகள் முற்றாக அடித்துச்செல்லப்பட்டன. 21 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். அவர்கள் சுகாதார நிலையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என அதிகாரிகள் கூறினர்.
தற்போது அந்தப் பகுதியில் மழை குறைந்துள்ளது. இருந்தாலும் அங்கிருந்து மக்களை வெளியேற்றும் பணி சிறிது தாமதமாகி வருகிறது. மீட்புப் பணியில் அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு வருகின்றனர். 
மேலும் பலர் மழை வெள்ளத்தில் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக மீட்புப் பணி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon