இந்தியா, பாகிஸ்தான் பதற்றநிலையைத் தணிக்க பெரும் பங்காற்றியதாகக் கூறும் சீனா

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றநிலையைக் குறைக்க சீனா ஆக்கப்பூர்வமான முறையில் பங்காற்றியதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சு தெரிவித்திருக்கிறது. கடந்த மாதம் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான வான்வழி மோதல் தணிந்து அமைதிநிலை நிலைநாட்டப்பட்ட பிறகு சீனா இவ்வாறு கூறுகிறது.

பதற்றம் உச்சத்தை எட்டியபோது, பாகிஸ்தான் மீது ஏவுகணைகளைப் பாய்ச்சப்போவதாக இந்தியா மிரட்டியிருந்தது. பதிலுக்கு, தானும் ஏவுகணைகளை விடப்போவதாக பாகிஸ்தான் அறைகூவல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. பதற்றநிலையைத் தணிக்க சீனாவும் ஐக்கிய அரபுச் சிற்றரசும் தலையிட்டதாக பாகிஸ்தானிய அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சமரசம் அனைத்துத் தரப்புகளின் நன்மைக்கே என்று சீன வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.

"இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் சீனா அண்டை நாடாக மட்டுமின்றி நட்பு நாடாகவும் உள்ளது. எனவே, இந்தப் பதற்றத்தைத் தணிக்க சீனா முனைப்புடன் பங்காற்றியது," என்று சீன வெளியுறவு அமைச்சு தெரிவித்தது. வேறுபாடுகளைக் களைய அமைதிப் பேச்சுகளில் ஈடுபடுமாறு இந்தியாவையும் பாகிஸ்தானையும் ஊக்குவிக்க அனைத்துலகச் சமூகத்துடன் இணைந்து செயல்பட சீனா விரும்புவதாகவும் அமைச்சு கூறியது.

சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யீ, பாகிஸ்தானிய வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரே‌ஷியை செவ்வாய்க்கிழமை (19 மார்ச்) சந்திப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!